கும்மிடிப்பூண்டி அருகே மற்றொரு அதிர்ச்சி! 13 வயது பாலியல் வன்கொடுமை

 
ச் ச்

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, முன்கூட்டியே பள்ளி முடிந்ததால், அருகில் ஆரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்வண்டி நிலையத்தைக் கடந்து ஆள்நடமாட்டம் இல்லாத மாந்தோப்பு வழியாக சென்ற போது பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் சிறுமியை கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமியின் உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில் இன்று வரை, குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

இந்தசம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் தமிழகம் மீளாத நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மேலும் ஒரு அதிர்ச்சியாக அரசு பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

-