13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை! 76 வயது முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை

 
z

13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து 75  வயது  முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் கீழ்விஷாரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்வர் பாஷா.  76 வயதான இந்த முதியவர் வியாபாரம்  தொடர்பாக சென்று வந்த இடத்தில் தந்தையை இழந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.   அடிக்கடி அந்த  சிறுமியை கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுத்திருக்கிறார்.

 இந்த பழக்கத்தில் ஒருநாள் சிறுமியை ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார் அன்வர் பாஷா .  சிறுமியும் பாசத்துடன் அவரின் பின்னால் சென்று இருக்கிறார்.    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அந்த சிறுமியை ஆசை வார்த்தை சொல்லி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்திருக்கிறார்.   

d

இதை வெளியே சொல்ல பயந்து சிறுமி பெற்றோரிடமும் வேறு யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். அடிக்கடி வயிற்று வலியால் சிறுமி அவதிப்பட்டு வந்திருக்கிறார்.   உடனே அவரின் தாயார் மகளை மெடிக்கல் ஷாப்பிற்கு அழைத்துச் சென்று வயிற்று வலி மாத்திரை வாங்கி கொடுத்திருக்கிறார்.

 யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென்று கடந்த ஆண்டு சிறுமிக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது.   இதை அடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அன்வர் பாஷா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை சொல்லி இருக்கிறார்.   இதை அடுத்து அன்வர் பாஷா மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 புகாரின் பேரில் போலீசார் அன்வர் பாஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் சிறையில்  அடைத்தனர்.  இது தொடர்பான வழக்கு விசாரணை வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதாக சிறுமியை கடத்தி சென்றதற்காக மூன்று ஆண்டுகள் சிறையும்,  கோக்சோ சட்டத்தில் 20 ஆண்டுகள் சிறையில் ஆக மொத்தம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.