மீண்டும் மீண்டும் மாடிக்கு இழுத்துச்சென்று 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

 
g

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம் பகுதியில் வசித்த வந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.   இச்சிறுமி பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.   மாணவியின் தாயார் மஹாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்து வருகிறார்.   மாணவியை அவரது பாட்டி படிக்க வைத்து பாதுகாத்து  வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் வேட்டவலத்தில்  மார்பின் சிரில் என்ற ஓட்டல் தொழிலாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.   பள்ளிக்கு செல்லும்போது மார்பினுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியை ஆசை வார்த்தை சொல்லி தன் வீட்டுக்கு சென்று கொஞ்ச நேரம் பேசி விட்டு வரலாம் என்று அழைத்திருக்கிறார் .வரவில்லை என்று வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

gr

 இதைப் பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.  சிறுமியும் வெளியே சொல்லாததால்,  அடிக்கடி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.   தன்னுடன் வேலை பார்க்கும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனையும் அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்திருக்கிறார்.  பின்னர் இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் வலுக்கட்டாயமாக மாடிக்கு இழுத்துச்சென்று  இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததை தெரிந்துகொண்ட அக்கம்பக்கத்தினர்,  திருவண்ணாமலையில் சைல்டு லைனுக்கு தகவல்  கொடுத்திருக்கிறார்கள்.   சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தியதும் திருவண்ணாமலை அரசு இல்லத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

 சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு கடலூர் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.  மார்பின் சிரில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.