கூட்டுப்பாலியல் வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்! குழந்தைக்கு தந்தை யார்? என்பதில் குழப்பம்

 
teen girl rape for one year

11-ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளானர்.

Centre Trains Rights Groups On Interventions To End Violence Against Women

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 3 மாதம் கர்ப்பமாக்கிய மாணவியின் பெரியம்மா மகன் மோகன்(32), அதே கிராமத்தை சேர்ந்த முதியவர்  வெங்கடேசன் (77) மற்றும் இளையராஜா (28) ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மாணவிக்கு திடீரென வயிறுவலி ஏற்பட்டதையடுத்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு கர்ப்பமாக இருப்பது உறுதியானதையடுத்து மாணவியிடம் பெற்றோர் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. மூன்று பேரும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை முக்கிய குற்றவாளியான மோகன், 10க்கும் மேற்பட்டோர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் விசாரணை செய்துவருகிறார்.