சாலையில் நடந்துசென்ற 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

 
rape

கூடுவாஞ்சேரி அருகே சாலையில் நடந்துசென்ற 12 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த 62 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.


செங்கல்பட்டு மாவட்டம்  ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(62). கொத்தனார் வேலை செய்து வரும்  இவர்,  ஊரப்பாக்கம் அருகே உள்ள தன் ஒப்பந்ததாரரிடம் சம்பள பணம் வாங்க சென்றுள்ளார். அப்போது, தெருவில் நடந்து வந்த 12 வயது சிறுமியிடம், ‘சாக்லெட் வாங்கி தருகிறேன்’ என ஆசைக்காட்டி அருகில் உள்ள கடைக்கு அழைத்து செல்வதுபோல், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். முதியவரின் இந்த செய்கையால் பயந்துபோன சிறுமி, அங்கிருந்து தப்பி, தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறி உள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதியவர் குறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று, முதியவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.விசாரணையில், முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார் அதனடிப்படையில் முதியவர் நாராயணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.