11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - இளைஞர் தலைமறைவு

 
g

சென்னையில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த  15 வயது சிறுமி அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் .   இவருடன் புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 19 வயது இளைஞர்  பழகி வந்திருக்கிறார்.   பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.   அடிக்கடி இருவரும் வெளியே சென்று சந்தித்து பேசி உள்ளனர்.

 இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர,  இருவரையும் கண்டித்துள்ளனர்.   ஆனாலும் அவர்கள் இதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெளியே சுற்றி வந்துள்ளனர்.   அப்போது ஆசை கூறி பலமுறை உல்லாசமாக இருந்திருக்கிறார் இந்த இளைஞர்.  

l

 இந்த நிலையில் திடீரென்று சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது .  பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.   இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞர் விக்னேஷை தேடி வருகின்றனர்.    இது தெரிந்ததும் விக்னேஷ் தலைமறைவாக இருக்கிறார் .  தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.