11 வயது சிறுமி.. 9 பேர்.. ஒரு மாதம்..நாக்பூரில் நடந்த கொடுமை

 
bj

11 வயது சிறுமியை  கடந்த ஒரு மாதமாக 9 பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.   இது குறித்து போலீசுக்கு தகவல்  தெரிந்ததும் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று அதன் பின்  ஒன்பது பேரையும் கைது செய்துள்ளனர்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரில் வசித்து வருகிறார் அந்த 11 வயது சிறுமி.    அந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 19ஆம் தேதி அன்று கூலி வேலைக்காக வெளியே சென்று இருக்கிறார்கள் .  சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.   அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும்  29 வயது வாலிபர் ரோஷன் என்பவர் சிறுமியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

dx

 தனியாக இருந்த சிறுமியிடம் பண ஆசை காட்டி பணம் தருகிறேன் என்று சொல்லி தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார் .  ஆனால் அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்ற போது தான் சிறுமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.   அங்கே அந்த ரோஷன் உடன் அவரது நண்பர்களும் இருந்திருக்கிறார்கள்.   சிறுமி வெளியே வர நினைத்தும் அவரால் முடியவில்லை.   ரோஷனும் அவரது நண்பர்களும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.   அதன் பின்னர் அங்கு நடந்ததை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு சிறுமியிடம் பணத்தை கொடுத்து இருக்கிறார்கள்.  

 சிறுமியும் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.  இது அந்த கும்பலுக்கு ரொம்பவே சாதகமாக இருந்திருக்கிறது .  அந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் மூன்று பேர் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

jj

இந்த விவரத்தை தெரிந்து கொண்ட கஜனன் என்கிற 40 வயது நபர் ஒருவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 19ஆம் தேதி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.   இது குறித்து தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருக்கின்றன .

போலீசார் அந்த சிறுமியை அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.   அப்போதுதான் கடந்த ஒரு மாதத்தில் ஒன்பது பேர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை சொல்லி இருக்கிறார் .  அதன் பின்னர் போலீசார் சிறுமி சொன்ன வாக்குமூலத்தின் படி,   கஜனன் ,ரோஷன், பிரேம் தாஸ், நிக்கில் , கோவிந்தா உள்பட 9 பேரையும் கைது செய்துள்ளனர்.

 11 வயது சிறுமியை ஒன்பது பேர் சேர்ந்து ஒரு மாதமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் நாக்பூர் பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி இருக்கிறது.