கறிக்கடைக்காரருடன் தனிமையில் இருந்த போது போட்ட திட்டம்! 1000 ஆடுகள் திருடிய பெண் சிக்கினார்

 
x

பாலியல் தொழிலாளிகளுடன் உறவு வைத்திருந்த மதுரவாயல் கறிக்கடைக்காரர் பாருக்,  சீக்கிரம் பணக்காரராக வேண்டுமென்றால் ஆடுகளை திருடி வந்து கொடு என்று தன்னிடம் உறவில் இருந்த  ஒரு பெண்ணிடம் சொல்ல அந்த பெண்ணும் அப்படியே கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி வந்து கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வர சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் தற்போது சிக்கி சிறையில் அடைபட்டு இருக்கிறார்கள்.

ம்

 சென்னையில் மதுரவாயல் பகுதியில் கறிக்கடை நடத்தி வருபவர் பாருக்.  இவர் பாலியல் தொழிலாளிகளிடம் அடிக்கடி தனிமையில்  உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.   அப்படித்தான் சரோஜினி என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   அவருடன் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.  

 அந்த பெண்ணுக்கு பண தேவைகள்  இருந்ததால் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்றால் ஆடுகளை திருடி வந்து கொடு நான் கொடுக்கும் படத்தை வைத்து சீக்கிரம் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று திட்டம் போட்டு கொடுத்திருக்கிறார்.   அதை அடுத்து சரோஜினி தன்னுடன் இரண்டு ஆண்களை சேர்த்துக் கொண்டு ஆடுகளை திருட ஆரம்பித்திருக்கிறார்.  

 சென்னை புறநகர் பகுதி பம்மல் ஆதாம் நகரில் சின்னப்பொண்ணு என்கிற 80 வயது முதியவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே  கயிற்றில் கட்டி போட்டு இருந்த ஆடுகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   அதன் பின்னர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது சிவப்பு நிற காரில் வந்த பெண்ணும் இரண்டு ஆண்களும் ஆடுகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்திருக்கின்றன. 

ச்

 இதை அடுத்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மீதமுள்ள ஆடுகளையும் தேடுவதற்காக அந்த மூன்று பேரும் மீண்டும் காரில் வந்திருக்கிறார்கள்.   அப்போது உஷாரான சின்னப்பொண்ணு  கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்திருக்கிறார்.  இதைக் கண்டு அந்த கும்பல் தப்பி ஓடி இருக்கிறது.   ஆனாலும் கார் பதிவு எண்ணை வைத்து போலீஸிடம் சொல்ல,   போலீசார்  விசாரித்ததில் அந்த கார் அனகாபுத்தூரில் இருக்கும் மெக்கானிக் கடையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

 போலீசார் அங்கு சென்று விசாரித்த போது அது அனகா புத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான கார்  என்பது தெரிய வந்திருக்கிறது.  அவரைப் பிடித்து விசாரித்த போது தான் தாம்பரம் அடுத்த முடிச்சுரை சேர்ந்த சரோஜினி என்கிற பெண்ணுடன் சேர்ந்து ஆடுகளை திருடியது தெரிய வந்திருக்கிறது.   திருடிய ஆடுகளை மதுரவாயல் கறிக்கடை பாருக்கிடம் விற்றதும் தெரிய வந்திருக்கிறது.   இதன் பின்னர்  பாருக், சரோஜினி, ஜெயக்குமார் உள்ளிட்ட மூணு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.