தாயை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைத்திருந்த மகள்

 
gg


துண்டு துண்டாக தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர்தான் தாயை கொன்று கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி வைத்திருந்தது தெரியவந்திருக்கிறது.   போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை லால்பாக் பகுதியைச் சேர்ந்தவர் வீனா ஜெயின் . 53 வயதான இந்த பெண் தனது 22 வயது மகள் ரிம்பிளுடன்  வசித்து வந்திருக்கிறார்.  

இந்த நிலையில், வீணாவின் சகோதரர் மற்றும் உறவினர் போலீசில் நேற்று திடீரென்று ஒரு புகாரை அளித்துள்ளனர்.  தனது சகோதரி வீனா ஜெயினை காணவில்லை. கடைசியாக அவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பார்த்தது. அதன் பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.   இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

b

 தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போது வீனாவின் வீட்டில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டார்கள்.  அப்போது பாத்ரூமில் இருக்கும் கப் போர்டு ஒன்றில் பிளாஸ்டிக் பைக்குள்  அழுகிய நிலையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து மேற்கொண்டு வீட்டை சோதனை செய்ததில்  மற்றொரு பெட்டிக்குள் துண்டாக்கப்பட்ட கை கால்கள்,  அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன.

 இவற்றைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அனைத்தையும் மீட்டு உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.    அந்த உடல் வீணாவின் உடல் என்பது தெரிய வந்திருக்கிறது .  இதற்கு பின்னர் வீட்டிலிருந்த வினாவின் மகள் டெம்பிள் தான் இந்த கொலையை செய்ததாக போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.  இதை அடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தாய் வீணாவை தான் கொலை செய்தேன் என்று டிம்பிள் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அவரை கொலை செய்ததற்கு உடலை மறைக்க கட்டர், கத்தி, உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கிறார் தாயின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி இடிருக்கிறார் . பின்னர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பெயரில் தனித்தனியாக சுற்றி வைத்திருக்கிறார். 

 வீட்டில் உள்ள பாத்ரூமில் மறைத்து வைத்திருந்திருக்கிறார்.  கொலை செய்ததை ரிம்பிள் ஒப்புக்கொண்டாலும் தாயை ஏன் கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.