கிரிக்கெட் மட்டையால் கள்ளக்காதலன் அடித்துக்கொலை! மதுபோதையில் டார்ச்சர் செய்ததால் ஆவேசம்

 
ஹ்ஹ்

மது அருந்தி விட்டு வந்து அளவு அதிகமாக தொல்லை கொடுத்ததால் கள்ளக்காதலன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.  அந்த பெண் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறார்.  இதை அடுத்து அந்த பெண் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பாண்டுப் மேற்கு சிவ்நகர் அருகே உள்ள  குராகா சால் பகுதியை சேர்ந்தவர் வினோத் சட்னாம் .  38 வயதான அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள் .  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அர்ர்

 இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வினோத்திற்கு அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு பண்டாரி என்கிற 48 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்திருக்கிறது. 

அப் பெண்ணை திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திய போது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன.    குடித்துவிட்டு வந்து  விஷ்ணு பண்டாரியையும் மகன் உள்பட குடும்பத்தினர் அனைவரிடமும் தகராறு செய்து வந்திருக்கிறார்.  இதனால் ஆத்திரமடைந்து தான் அனைவரும் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. 

 இதை தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,  விஷ்ணு பண்டாரி, அவரது மகள் லட்சுமி கதை ,அவர்களின் கணவர் யோகேஷ் கதம்,  சகோதரர் ராஜேந்திர பண்டாரி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் பிரேம்குமார் உள்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.