காதலியின் மகள்களுக்கு பாலியல் தொல்லை! அரிவாளால் வெட்டி ஆற்றில் வீசப்பட்ட காதலன்

 
ல்

காதலியின் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டி ஆற்றில் தள்ளிய பெண்ணை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அடுத்த வேலங்காடு பகுதியில் வசித்து  வந்தவர் வினோதா.  இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.  கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார்.  இதன் பின்னர் மூன்று குழந்தைகளுடன் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறிக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்.   கூலி வேலைக்கு சென்று மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வந்திருக்கிறார் .

ட்

 செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தபோது விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபு என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.  இந்த பழக்கம் பின்னர் கள்ள உறவாக மாறி இருக்கிறது.   எட்டு வருடங்களாக இருவரும் செங்கல் சூளையில் வேலை செய்து கணவன் மனைவியாகவே குழந்தைகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் காவிரி ஆற்றில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பது போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது.   சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   கொலை செய்யப்பட்டவர் யார் என்கிற விவரம் தெரியாததால் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

 இதன் பின்னர் பிரபுவின் தந்தை,   தனது மகனை காணவில்லை என்று முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரை அடுத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்த  பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.   அப்போதுதான் போலீசாருக்கு அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது.   தனது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால்,   நேரில் பார்த்தும் கண்டித்தும் கேட்காததால் அரிவாளை எடுத்து தலையில் வெட்டி கொலை செய்து,  காவிரி ஆற்றில் தள்ளி விட்டு விட்டேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.  இதை அடுத்து அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.