விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை காண சென்ற 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

 
rape

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சத்தியவேடு அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை காண சென்ற 14 வயது  சிறுமியை மயக்க ஊசி செலுத்தி கடத்தி சென்று கூட்டு பாலியல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Assam: Suleiman, 2 others arrested for abduction, gang rape of girl in  Karimganj

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம்,  கே.வி.பி.புரம் மண்டலம், எம்மிராஜுலா கண்ட்ரிகாவில் 14 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர் கூட்டு பாலியியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விநாயகர் சதுர்தியை முன்னிட்டு நேற்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதனை காண வந்த 14 வயது மைனர் சிறுமிக்கு போதை ஊசி போட்டு, ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் 3 மணி நேரத்திற்கு பிறகு சிறுமியை அவரது வீட்டின் அருகே விட்டு சென்றனர். உடலில் பல இடங்களில் காயங்களுடம்  இருந்த சிறுமி வீட்டிற்கு செனரு நடந்த விவரத்தை  பெற்றோரிடம் கூறி உள்ளார். 

இதனையடுத்து சிறுமியின் தாயும், பாட்டியும் கே.வி.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். இதில் மூன்று இளைஞர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் ஒருவர் பெயர் குணா என்பது தெரிய வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளைஞர்களை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.