• July
    22
    Monday

Main Area


Thiripura Chit Funds

400 கோடி ஏமாற்றிய சிட் பண்ட் நிறுவனம், 2 ஆண்டுகளாக தொடர் நாடகம்!

பத்தாயிரம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டு என்ற கணக்கில் 20 மாதங்களுக்கு தின வசூல். இருபதாவது மாத முடிவில் அல்லது குலுக்கல் சீட்டில் முன்பாகவே தள்ளுபடி போக பணத்தை எடுத்துக் க...


அதிரடி சோதனை

டி.எஸ்.பி லஞ்சம் கேட்டதால் பார் உரிமையாளர் தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மாணிக்கவேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மயிலாப்பூ...

கள்ளக்காதலனை குப்பையோடு குப்பையாக வைத்து எரித்து கொன்ற கள்ளக்காதலி: மதுரையில் பரபரப்பு!

மதுரை : கள்ளக்காதல் பிரச்னையால் இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. இவருக்கும் காளீஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இதையடுத்து கணவன் மனைவிக்குள்  ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மணிகண்ட பிரபு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் இறந்தபின்பு அதே பகுதியை சேர்ந்த வெயில்முத்துவுக்கும் காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே வெயில்முத்து குடும்பத்தார் காளீஸ்வரியிடமிருந்து தங்கள் மகனை மீட்டுத்தருமாறு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

murder

இந்நிலையில் காளீஸ்வரி போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் தன்னுடன் வாழ்ந்துவந்த வெயில்முத்து தன்னோடு சண்டையிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி  தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, வெயில்முத்து மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் காளீஸ்வரி முன்னுக்கு பின் முரணான தகவல் கூறி வந்த நிலையில் அவரிடம் விசாரணையை திவீரப்படுத்தினர். அப்போது வெயில் முத்துவை தான்தான் கொன்றதாக காளீஸ்வரி ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ' வெயில்முத்து சில நாட்களாக என்மீது சந்தேகப்பட்டுக் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 17ஆம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் என்னைத் தாக்கினார். கோபத்தில் நான் அவரை கீழே தள்ளிவிட்டேன். அவர் மயக்கநிலைக்குப் போனதால் ஒருவேளை மீண்டும் மயக்கம் தெளிந்து எழுந்தால்  என்னை கொலை செய்து விடுவார் என்று பயந்து அவரது கழுத்தை நெரித்துக் கொன்றேன். பிறகு அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தேன். ஆனால் அவரது  உடல் சரியாக எரியாததால்   வெயில்முத்து உடலை வெளியே இழுத்து வந்து குப்பையில் போட்டு மீண்டும் எரித்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

murder

இதையடுத்து வெயிலமுத்துவை கொலை செய்த குற்றத்திற்காக காளீஸ்வரியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். 
 

manikkodimohan Sat, 07/20/2019 - 10:26
crime Illegal Madurai affair வெயில்முத்து க்ரைம்

English Title

madurai man murder for illegal affair in madurai district

News Order

0

Ticker

0 
கோப்பு படம்

பாட்டி வீட்டில் வளர்ந்த வந்த 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை! பதறவைக்கும் சம்பவம்

திண்டிவனம் அருகே உள்ள தென்நெற்குணம் கிராமத்தைச்  சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 9 வயதில் ஒரு பெண்ணும், 7வயதில் இரண்டாவது குழந்தையும் உள்ளன.அந்த பெண்ணை விட்டு கணவர் பிரிந்து சென்று...Naxals

இன்ஃபார்மர்ஸ் என்று 2 மலைவாழ்மக்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்கள்!

ஆந்திரா மலைக்கிராமங்களில் ஒன்றான வீரவரம் கிராமத்திற்கு இரவு நேரத்தில் துப்பாக்கிகளுடன் வந்த நக்சலைட்கள், பாஸ்கர் ராவ், சிட்டி பாபு என இருவரை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே இழுத்து...


 மஞ்சுளா

சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்!

பழனிவேலுக்கு சொரியாசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் மஞ்சுளா


Kyoto Fire

ஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீவிபத்து, ஒருவர் பலி, பலர் படுகாயம்!

வீட்டிற்கு வெளியே இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை தீக்கிரையாக்கி விளையாடும் சைக்கோக்கள் பற்றிய செய்திகள் நிறைய உண்டல்லவா. தங்களுக்கு சம்பந்தமேயில்லாத பொருட...


Balan's remains

கோத்தகிரி விவ்சாய தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை மிதித்து மரணம்!

நேற்று தனது நிலத்திற்குச் சென்ற பாலன், இன்று காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது தோட்டத்துக்கு அருகே உள்ள காட்டில் பாலன் சடலமாகக...


Merin Joseph, IPS

சிங்கம் 4 எடுத்தா, இந்த கேரள பெண் ஐபிஎஸ் அதிகாரிதான் ஹீரோ!

தேவையான ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு, எந்த ஜூனியர் அதிகாரியையும் அனுப்பாமல் ஒரு சிறு குழுவுடன் கிடைத்த அடுத்த ஃப்ளைட் ஏறிவிட்டார். ஃபார்மாலிட்டிகளை முடித்துக்கொண்டு, இரண்டே நாட்...Sheby

மூர்த்தி மில்லிகிராம் அளவுக்கு சிறியதானாலும், கீர்த்தி மணிக்கணக்கில் நீளும் போதைப்பொருள்!

2 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 120 பேருக்கு தேவையானதாம். தனிநபருக்கெல்லாம் மில்லி கணக்கில்தான். மில்லி கணக்கில் கூடுதலாக எடுத்துக்கொண்டாலும் சங்குதானாம். மிகக்குறைவான அளவிலான...


 ஹரிஷ்

மயானத்தில் 4 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை: மொத்த குடும்பமும் உடந்தையாக இருந்த கொடூரம்!

சில தினங்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போன நிலையில் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.


 ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்: அரிவாளால் சரமாரியாக வெட்டிய தந்தை!

சென்னை அம்பத்தூரில் சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி சத்யபிரியா. இவருக்கு பேஸ்புக் மூலம் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


Chain snatchers

சென்னை கொள்ளையர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் மாவுகட்டு பிரான்ச்!

என்னன்னே தெரியல சார், இப்புடித்தான் போன வாரம் செயின் கொள்ளையர்கள் 10 பேரை அரெஸ்ட் பண்ணினோம், பத்து பேரும் குளிக்கப் போன இடத்துல கீழே விழுந்து ஒரே நேரத்துல 10 பேர் கையும் உடைஞ்சு மா...


பிக்பாஸ்

’100நாள் செக்ஸ் வச்சுக்காம எப்பிடி இருப்பீங்க’...பிக்பாஸ் மீது இன்னொரு நடிகை போலீஸில் புகார்...

வெளிநாட்டு டி.வி.க்களில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.குற்றவாளி

60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிமீ கொள்ளையனைத் துரத்திச் சென்ற போலீஸ்

சென்னையில் தொடர் கொள்ளைகள் நடைப்பெற்று வருவது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதும் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. சிசிடிவி கேமராக்களின் உதவியால் பல்வேறு கொள்ளை, கொலை சம்பவங்களி...


 குழந்தை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு | அதிர்ச்சி வீடியோ

சென்னையில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி வருகிற நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயதான ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...


 தற்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை: இறுதி சடங்கிற்கு பணம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு கொண்ட துயரம்!

இறுதிச் சடங்கிற்குப் பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.