பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்… சி.பி.எம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்… சி.பி.எம்.

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் இதர காரணங்களுக்காக மத்திய அரசுக்கு எதிராக ஜூன் 16ம் தேதி (இன்று) நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று சி.பி.எம். கட்சி தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேச சி.பி.எம். கட்சியின் நிர்வாக உறுப்பினர் பாபுராவ் எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்… சி.பி.எம்.

பாபுராவ் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் கோவிட்-19 உச்சகட்டமாக இருக்கும் இந்த நேரத்தில், இந்தியா கலால் வரி மற்றும் இதர வரிகளை உயர்த்துகிறது. கடந்த மார்ச் மாதத்தில் கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ.10ம், டீசலுக்கு ரூ.13ம் உயர்த்த முடிவு செய்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்… சி.பி.எம்.

இது கோவிட்-19 தொகுப்பை காட்டிலும் அதிகமாகும். சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வருகின்றனர், ஆனால் அதேநேரத்தில் சாமானிய மக்கள் மீது சுமையை வைக்கிறது. இது மனிதாபிமானமற்ற செயல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.