திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஒரு குட்டி ஹிட்லர்.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு

 

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஒரு குட்டி ஹிட்லர்.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு

திரிபுராவிலிருந்து கம்யூனிஸ்டுகளை வேரறுக்க என்ற திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை குட்டி ஹிட்லர் என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது.

திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமார் தேப் தலைமையில் பா.ஜ.க.-ஐ.பி.எப்.டி. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் தலாய் மாவட்டம் அம்பாஸ்சாவில் பா.ஜ.க.வின் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் பிப்லாப் குமார் தேப் பேசுகையில் கூறியதாவது: 2023ம் ஆண்டு வரை திரிபுராவிலிருந்து கம்யூனிஸ்டுகளை வேரறுப்பதில் (கட்சியை இல்லாமல் செய்வது) மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும்.

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஒரு குட்டி ஹிட்லர்.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு
முதல்வர் பிப்லாப் குமார் தேப்

இந்த திசையை நோக்கி நாம் பணியாற்றுவது அவசியம். தேசியவாதம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி செய்திகளை மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் நாம் பரப்புவது அவசியம். அதன்பிறகே நமது அமைப்பு வலுவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் பிப்லாப் குமார் தேப் அண்மையில், திரிபுராவின் 80 சதவீத வீடுகளில் சுவாமி விவேகானந்தர் படங்கள் தொங்கினால், அப்புறம் இந்த அரசு (பா.ஜ.க.) மேலும் அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளுக்கு இருக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஒரு குட்டி ஹிட்லர்.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு
பிரதமர் மோடி

முதல்வர் பிப்லாப் குமார் தேபின் கருத்து குறித்து சி.பி.எம். கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பு பதவியில் இருப்பதால், ஒரு முதல்வர் அத்தகைய அறிக்கையை வெளியிட முடியாது. அவரது வார்த்தைகள் ஒரு பாசிசத்தை போல ஒலிக்கின்றன.இந்த குட்டி ஹிட்லரை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. 2018ம் ஆண்டில் ஆளும் கூட்டணி (பா.ஜ.க.-ஐ.பி.எப்.டி.) ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 31 மாத கால ஆட்சியில், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தது, பலரை கொன்றது மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.