“கருத்துக்கணிப்புகளில் அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்”

 

“கருத்துக்கணிப்புகளில் அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்”

கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் அதிமுக – பாஜக கூட்டணி வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும் என உறுதிப்படுத்தியிருப்பதால், நாளிதழ்களில் திமுகவுக்கு எதிரான விளம்பரங்களைக் கொடுத்துள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

“கருத்துக்கணிப்புகளில் அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்”

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் திமுகவிற்கு எதிராக முதல் பக்கத்திலேயே விளம்பரச் செய்திகள், அதிமுக – பாஜக கூட்டணியால் வெளியிடப்பட்டுள்ளன. காலம் கடந்த, மிகப் பழைய வெறுப்புச் செய்திகளைத் தொகுத்து, திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் நோக்கில் விளம்பரச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் அதிமுக – பாஜக கூட்டணி வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும் என உறுதிப்படுத்துகின்றன.

இந்நிலையில் இத்தகைய விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. பத்திரிகைகள் ஜனநாயகத்தின் மிக முக்கியத் தூண்கள். இவற்றின் மீது தரம் தாழ்ந்த விளம்பரங்கள், செய்திகள் எனும் மாசு படிந்துவிடாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், தேர்தல் விதிகளுக்கு முரணாக இத்தகைய செய்தி விளம்பரங்கள், தேர்தல் ஆணையத்தின் தணிக்கைகளுக்கும், விதிகளுக்கும் உட்படுத்தப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது.

“கருத்துக்கணிப்புகளில் அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்”

திமுக கூட்டணி வெற்றியைத் தடுக்க மிகவும் தரம் தாழ்ந்த இத்தகைய விளம்பரச் செய்திகள் வெளியிடப் படுகின்றன என்பதைத் தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களித்து சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வதின் மூலம் நல்ல தீர்ப்பை தமிழக மக்கள் வழங்குவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.