கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி அதிக திறன்… ஆய்வில் வெளியான தகவல்!

 

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி அதிக திறன்… ஆய்வில் வெளியான தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. குறுகிய காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதுவரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி அதிக திறன்… ஆய்வில் வெளியான தகவல்!

இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்ட பிறகு இரண்டு தடுப்பூசியுமே சிறந்த பலன்களை தருவதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி தன்மை அதிகமாக இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வைச் 13 மாநிலங்களைச் சேர்ந்த 515 சுகாதார பணியாளர்களிடம் நடத்தப்பட்டது. அதாவது அவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளை வைத்து நோய் எதிர்ப்புத் திறன் உருவானது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுள் 425 பேருக்கு கோவிஷீல்டும் 90 கோவாக்சினும் செலுத்தப்பட்டது.

இதன் முடிவில், கோவிஷீல்டு தடுப்பூசி அதிக திறன் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கோவிஷீல்டு தான் சிறந்தது என தெரிவிக்கப்படவில்லை. இரண்டு தடுப்பூசியுமே நோயின் தீவிரத்தையும் உயிரிழப்பையும் தடுத்துள்ளன. இது ஆரம்பக் கட்ட ஆய்வு என்பதால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.