சென்னையில் கோவிஷீல்டு மருந்து பரிசோதனை தொடக்கம்!

 

சென்னையில் கோவிஷீல்டு மருந்து பரிசோதனை தொடக்கம்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கியிருக்கிறது.

இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு மருந்தின் இரண்டு கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இந்த தடுப்பூசியை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளன. கொரோனா பாதித்தவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக கூறப்படும் இந்த மருந்தின் 3 ஆம் கட்ட பரிசோதனையில், ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த பரிசோதனை அண்மையில் நிறுத்திவைக்கப்பட்டது.

சென்னையில் கோவிஷீல்டு மருந்து பரிசோதனை தொடக்கம்!

அதுமட்டுமில்லாமல் இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே பரிசோதனை செய்யப்பட விருந்த கோவிஷீல்டு மருந்து, இந்த பிரச்னையின் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, இந்த கோவிஷீல்டு மருந்து பாதுகாப்பானது என ஆக்ஸ்போர்டு நிறுவனம் தெரிவித்ததால் பரிசோதனை மீண்டும் தொடங்கியது.

சென்னையில் கோவிஷீல்டு மருந்து பரிசோதனை தொடக்கம்!

இந்த நிலையில் கொரோனாவுக்காக ஆக்ஸ்போர்டு பல்கலை. கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு பரிசோதனை சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனையில் தன்னார்வலர்களின் உடலில் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தமாக 16 இடங்களில் பரிசோதனை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.