மதுரை சலூன்கடை மோகனை பாராட்டிய பிரதமர் மோடி

 

மதுரை சலூன்கடை மோகனை பாராட்டிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடையே உரையாற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மதுரை சலூன்கடை மோகனை பாராட்டிய பிரதமர் மோடி

இந்நிலையில் பிரதமர் மோடி மே மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பேசும் போது, “மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக்காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மதுரை சலூன்கடை மோகனை பாராட்டிய பிரதமர் மோடி

தொடர்ந்து பேசியுள்ள அவர், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னையை சந்திக்கின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு தந்தார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பாராட்டுகள்” என்றார்.