ஹெலிக்சன் நிறுவனத்துக்கு ‘கோவிட் சாம்பியன் விருது’

 

ஹெலிக்சன் நிறுவனத்துக்கு ‘கோவிட் சாம்பியன் விருது’

ஸ்மார்ட்போன் மூலம் நோயாளிகளை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்த ஹெலிக்சன் நிறுவனத்துக்கு ’கோவிட் சாம்பியன்’ விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, சுவாச விகிதம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில், சென்னை ஐஐடியுடன் இணைந்து இந்த கருவியை ஹெலிக்சன் நிறுவனம் உருவாக்கியது.

ஹெலிக்சன் நிறுவனத்துக்கு ‘கோவிட் சாம்பியன் விருது’

கொரோனா தொற்று காலத்தில், அவசர மருத்துவ சேவைகள் தவிர பிற மருத்துவமனைகள் திறக்கப்படவில்லை. எனவே மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை தொலைதூரத்தில் இருந்து கண்காணித்து அதற்கான தீர்வுகளை வழங்க இந்த கருவி உருவாக்கப்பட்டது. ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைக்கப்பட்ட இந்த , நோயாளிகளின் விவரங்களை உடனுக்குடன் மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தும் . அவர்கள் தேவைக்கேற்ப நோயாளுக்கு மருத்துவ சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமே அளிப்பார்கள்.

இந்த முயற்சியை பாராட்டும் விதமாக, இந்நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிஐஐ – கனெக்ட் 2020 காணொலி காட்சி வழியாக நடைபெற்ற மாநாட்டில் விருது வழங்கினார்.

ஹெலிக்சன் நிறுவனத்துக்கு ‘கோவிட் சாம்பியன் விருது’

இது குறித்து ஹெலிக்சன் நிறுவன தலைவர் விஜய் சங்கர் ராஜா கூறுகையில், இந்த தொற்று காலத்தில் , இதன் மூலம் மருத்துவ சேவைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன. கொரோனா தொற்றினை தடுக்கும் போராட்டத்தில் அரசுடன் இணைந்து செயலாற்றுவது , தங்களுக்கு வலுசேர்ப்பதாக குறிப்பிட்டார். இதுபோன்ற பல கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்து வருவதாகவும் விஜய் சங்கர் ராஜா கூறினார்.