உயிருக்கு ஆபத்தானதா? COVID-19க்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புதிய நோய் MIS-C

உயிருக்கு ஆபத்தானதா? COVID-19க்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புதிய நோய் MIS-C

கொரோனா, உருமாறிய கொரோனா என்று கொரோனா தொற்றுகளே அடுத்தடுத்து வந்து வதைத்துக்கொண்டிருக்க, கொரோனா தொற்றில் இருந்தா மீண்டாலும் கருப்பு பூஞ்சை, வெள்ளைப்பூஞ்சை வேறு ஆட்டிப்படைக்கிறது மனித குலத்தை. இப்போது, கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகள் மீண்டாலும் MIS-C என்கிற ஆபத்து காத்திருக்கிறது என்று வரும் மருத்துவ தகவல் பெற்றோர்களை கலங்க வைத்திருக்கிறது.

உயிருக்கு ஆபத்தானதா? COVID-19க்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புதிய நோய் MIS-C

கொரோனா தொற்று பாதித்த குழந்தைகள் அத்தொற்றில் இருந்து மீண்டாலும் அவர்களுக்கு வேறொரு ஆபத்து நேர வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா தொற்றில் இருந்து மீளும் குழந்தைகளை மல்டிசிஸ்டம் இன் பள மேட்டரி சிண்ட்ரோம் அழற்சி நோய் தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இந்த நோயின் கிருமிகளை எதிர்த்து போரிடுவதற்கு குழந்தைகளின் உடம்பில் ஆக்ஸிடென்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

உயிருக்கு ஆபத்தானதா? COVID-19க்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புதிய நோய் MIS-C

எம்ஐஎஸ்-சி உயிருக்கு ஆபத்தானது என்று உறுதியாக கூற முடியாது, ஆனால் இந்த தொற்று குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குழந்தைகளின் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை மோசமாக பாதிக்கும் என்று தெரிவிக்கும் மருத்துவர்கள், தற்போது இந்தியாவில் இந்த வகை அழற்சி நோயினால் ஐந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிரவைக்கின்றனர்.

MIS-C என்கிற இந்த அழற்சி நோய், கொரோனா தொற்று பாதித்த 4 அல்லது 6 வாரங்களுக்கு பின்னர் இந்நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள்.

உயிருக்கு ஆபத்தானதா? COVID-19க்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புதிய நோய் MIS-C

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்ட பிறகு, ஆன்டிபாடிகள் குழந்தைகளின் உடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆன்டிபாடிகள் அவர்களின் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக உடலில் செலுத்தப்படும் ஆன்டிஜெனின் எதிர்வினையின் விளைவாக எம்.ஐ.எஸ்-சி உருவாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

உயிருக்கு ஆபத்தானதா? COVID-19க்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புதிய நோய் MIS-C

நீண்டகால காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலி, கடும் அதிர்ச்சி இருந்தால் MIS-C க்கான அறிகுறிகள் என்றும், குழந்தைகளில் எம்.ஐ.எஸ்-சி அரிதானது என்றும், ஆனால் அது ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த ஆண்டு, இதுபோன்ற மூன்று குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அலைக்குப் பிறகு, இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எம்ஐஎஸ்-சி நோய் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.