வியட்நாம் மாணவர்கள் கண்டுபிடித்த கோவிட்-19 ஹெல்மெட்- இணையத்தை கலக்கும் வீடியோ

வியட்நாம் மாணவர்கள் கண்டுபிடித்த கோவிட்-19 ஹெல்மெட்- இணையத்தை கலக்கும் வீடியோ

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 3 மாணவர்கள் இணைந்து கொரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்கான ஹெல்மெட் உருவாக்கியுள்ளனர்.
முன்புறத்தில் முழுவதும் கண்ணாடி தடுப்பு அமைத்துள்ளதுடன், தாடைக்கு கீழே முகத்தை மூடும் வகையிலும் அமைத்துள்ளனர்.

வியட்நாம் மாணவர்கள் கண்டுபிடித்த கோவிட்-19 ஹெல்மெட்- இணையத்தை கலக்கும் வீடியோ

ஹெல்மெட் முகத்தை முழுவதும் மூடுவதால் ஆக்சிஜன் செல்வதற்கு தலைக்கு பின்புறம் இருந்து குழாய் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முகத்தில் மாஸ்க், அதற்கு மேலே தடுப்பு ஷூட் என அணியத் தேவையில்லை.
கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் சிகிச்சையின்போது, நேரடியாக வெளிக்காற்றை சுவாசிக்கத் தேவையிருக்காது. இதனால் அவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும் என இதை வடிவமைத்துள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியட்நாம் மாணவர்கள் கண்டுபிடித்த கோவிட்-19 ஹெல்மெட்- இணையத்தை கலக்கும் வீடியோ

கடந்த மாதம் கனடாவில் நடைபெற போட்டியில், இந்த வடிவமைப்புக்கு, சர்வதேச சிறந்த கண்டுபிடிப்பு விருதும் அந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.