கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக எடுத்துச் சென்ற கொடுமை

 

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக எடுத்துச் சென்ற கொடுமை

தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் 50 வயது நபருடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் ஜூன் 27 ஆம் தேதி நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் 2 நாட்களுக்கு பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், உறவினர்கள் அதற்கு காத்திருக்காமல் ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து அதில் உடலை கொண்டு சென்றனர். அதுவும் உயிரிழந்தவரின் தலை, கால்கள் வெளியே தெரியும் வகையில் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என விளக்கமளித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக எடுத்துச் சென்ற கொடுமை

பல இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஒருபுறம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அரசுத் தரப்பில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.