“கொரானாவை  கொசு மாதிரி கொன்னுடுவேன் “இப்படி உங்க குழந்தையை சொல்ல வைக்க சில வழிகள்

 

“கொரானாவை  கொசு மாதிரி கொன்னுடுவேன் “இப்படி உங்க குழந்தையை சொல்ல வைக்க சில வழிகள்

அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து உலக நாடுகளும் கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 1.5 ஆண்டுகளாக கொரோனாவை கட்டுப்படுத்துவதே அனைத்து நாடுகளுக்கும் முக்கிய தலைவலியாக இருந்தது.

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை குறைந்துள்ள போதிலும், சிறார்களுக்கு ஏற்படும் வைரஸ் பாதிப்பு என்பது இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

கொரோனா முதல் அலை சமயத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மட்டும் 7826 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அது 2019 ஆகஸ்ட் மாதம் 7485ஆகவும், செப்டம்பர் மாதம் 4022ஆகவும் குறைந்தது. அப்படியே குறைந்த பாதிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 885ஆக குறைந்தது. சிறார்கள் மத்தியில் உறுதி செய்யப்பட்ட வைரஸ் பாதிப்புகளில் இது தான் குறைவு.

சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் ஆபத்து இன்னும் முழுமையாக குறையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்தியாவில் சிறார்களுக்கு செலுத்த இதுவரை எந்தவொரு வேக்சினுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, சிறார்கள் மத்தியில் வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் கொரோனா 3ஆம் அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படும் நிலையில், இது கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக உருவெடுத்துள்ளது.

“கொரானாவை  கொசு மாதிரி கொன்னுடுவேன் “இப்படி உங்க குழந்தையை சொல்ல வைக்க சில வழிகள்

கொரோனா தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றிய செய்திகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது மூன்றாம் அலை தாக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்திருக்கிறார்கள். கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவின் பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி இங்கே பார்ப்போம்

குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொரோனா தொற்றின் பாதிப்பு குறையும் வரை நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே செல்ல நேரிட்டால் பெரியவர்களின் துணையோடு அழைத்து செல்ல வேண்டும். தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பழக்க வழக்கங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளை தினமும் இரண்டுவேளை குளிக்க வைப்பது அவசியமானது. கண்களை கசக்குவது, மூக்கை சொறிவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும்.

காலையிலும், மாலையிலும் இளம் சூரிய வெளிச்சத்தில் 30 நிமிடங்களாவது இருக்கும்படி செய்ய வேண்டும்.

வீட்டை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை தினமும் தூய்மை செய்ய வேண்டும்.

பெரியவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யாமல் குழந்தைகளை தொடக்கூடாது. சளி, இருமல், இருப்பவர்கள் குழந்தைகளை முத்தமிடுதல் கூடாது.

படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

குழந்தைகளை ஒருநாளுக்கு மூன்று முறை. மிதமான சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க பழக்கப்படுத்த வேண்டும்.

புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக கொடுக்க வேண்டும். ஒருநாளுக்கு இரண்டு முட்டைகளை சாப்பிட கொடுக்கலாம். பச்சைப்பயறு, கருப்பு கொண்டைக்கடலை, ராஜ்மா, பட்டாணி போன்றவற்றில் சுண்டல் செய்து கொடுக்கலாம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகள், உலர்பழங்கள், பருப்புகள் விதைகளை தினமும் உணவில் சேர்த்து வரலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை , நெல்லிக்காய் போன்றவற்றை தினமும் கொடுக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், வெளியில் வாங்கிய உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. சத்துள்ள உணவுகளை வீட்டிலேயே சமைத்து கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, கண்கள், கன்னங்களில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை  அணுக வேண்டும்.

கிருமி நாசினி, உடலின் வெப்பத்தை அளவிடும் வெப்பமானி (தெர்மோமீட்டர்) உடலின் ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ள உதவும். ஆக்சிமீட்டர் போன்றவைகளை வீட்டில் வாங்கி வைத்திருப்பது நல்லது.