பெட் தேடி அலையும் நோயாளிகள் -பெட்டி வாங்கிக்கொண்டு விற்கும் தரகர்கள் -கொரானா நேர கொள்ளை

 

பெட் தேடி அலையும் நோயாளிகள் -பெட்டி வாங்கிக்கொண்டு விற்கும் தரகர்கள் -கொரானா நேர கொள்ளை

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு பெட் வாங்கிக்கொடுக்க பணம் வசூலித்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட் தேடி அலையும் நோயாளிகள் -பெட்டி வாங்கிக்கொண்டு விற்கும் தரகர்கள் -கொரானா நேர கொள்ளை


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனையில் அரசு சார்பில் ஒதுக்கப்படும் பெட்களை சில தரகர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த பெட்களை விற்பதாக நிறைய புகார்கள் அரசுக்கு வந்த வண்ணமிருந்தது
இதையடுத்து, பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுப்பதாக கூறி பணம் வசூலிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்
அப்போது ஜெயநகரை சேர்ந்த 43 வயதான நேத்ராவதி என்ற பெண்ணும் ,இவருடைய உறவினர் 35 வயதான ரோகித் குமார் என்பவரும் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் தனியார் மருத்துவமனைகளில் பெட் வசதி ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறி , இதற்காக முதலில் தங்களது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும்படி தெரிவிப்பார்கள்.
பின்னர் தங்களது வங்கி கணக்குக்கு பணம் கிடைத்தவுடன், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் பெட் வசதி செய்து கொடுத்தது தெரியவந்தது. இதுவரை 4 நோயாளிகளுக்கு படுக்கை வாங்கி கொடுத்து அவர்களிடம் ரூ.1½ லட்சம் வரை வாங்கியது தெரியவந்துள்ளது.பிறகு இருவரையும் பிடித்து ,அவர்கள் மீது வழக்கு பதிந்து ,அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி , தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழலில் இப்படி மனிதாபிமானமற்ற முறையில் சிலர் ஈடுபடுவது மனதை வேதனையடைய செய்கிறது .

பெட் தேடி அலையும் நோயாளிகள் -பெட்டி வாங்கிக்கொண்டு விற்கும் தரகர்கள் -கொரானா நேர கொள்ளை