”ஐபோன் 12 அறிமுகமாவதற்குள் கவர் கேஸ் அறிமுகம்”டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் அதிரடி

 

”ஐபோன் 12 அறிமுகமாவதற்குள் கவர் கேஸ் அறிமுகம்”டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் அதிரடி

ஐபோன் 12 அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே அந்த போனுக்கான கவர் கேஸ்களை டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி அதிரடித்துள்ளது.

”ஐபோன் 12 அறிமுகமாவதற்குள் கவர் கேஸ் அறிமுகம்”டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் அதிரடி

பொதுவாக போன் வெளியான பிறகு தான் அதன் வடிவத்துக்கு ஏற்ப கவர் கேஸ்கள் மற்றும் ஸ்கிரீன் புரொடெக்டர் ஸ்டிக்கர்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த முறை ஆப்பிள் ஐபோன் 12 இன்று அறிமுகப்படுத்ப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த போனுக்கான கவர் கேஸ்களை டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி பலரின் புருவத்தை உயர செய்துள்ளது.

இந்த கவர் கேஸ்களின் ஓரத்தில் ஏர் குஷன் டெக்னாலஜி என்ற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போன் கீழே விழுந்தால் போனின் ஓரத்தில் அவ்வளவு எளிதில் பாதிப்பு ஏற்படாது என தெரிகிறது. அதேப்போல திரை கண்ணாடியை பாதுகாக்கும் புரொடக்டர் பில்டரையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”ஐபோன் 12 அறிமுகமாவதற்குள் கவர் கேஸ் அறிமுகம்”டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் அதிரடி

அதில் நாட்ச் உள்ளதும், ஐபோன் 11இன் திரை அளவிலும், இந்த ஸ்கிரீன் புரொடக்டர் உள்ளதும் தெரியவந்துள்ளது. ஐபோன் 12 வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி கவர் கேஸ்களை தேடி அலையவோ காத்திருக்கவோ தேவையில்லை என்ற நிலையை இந்நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த கவர் கேஸ்களின் விலை 1,190 என்றும், ஸ்கிரீன் டெம்பர்ட் கிளாஸின் விலை 699 ரூபாய் முதல் 899 ரூபாய் வரை என தெரியவந்துள்ளது.

”ஐபோன் 12 அறிமுகமாவதற்குள் கவர் கேஸ் அறிமுகம்”டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் அதிரடி
  • எஸ். முத்துக்குமார்