‘கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி’ – எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்!

 

‘கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி’ – எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்!

இரண்டாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் வெற்றி அடைந்ததால், அடுத்த வாரம் 3ம் கட்ட பரிசோதனை தொடங்கவிருப்பதாக எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா தயாரித்த தடுப்பூசி கோவாக்சின். கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய நாடு முழுவதிலும் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், சென்னை காட்டங்குளத்தூர் பகுதியில் இருக்கும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

‘கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி’ – எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்!

முதற்கட்ட பரிசோதனையில் 18 வயது முதல் 55 வயது வரையிலான தன்னார்வலர்கள் உடலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் நலமாக இருந்ததால், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது. அதன் படி, அடுத்த கட்டமாக 12 வயது முதல் 65 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட பரிசோதனையும் வெற்றி அடைந்து விட்டதாக எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும், 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.