இந்து கோவில் கட்ட தடை விதிக்க முடியாது! – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

 

இந்து கோவில் கட்ட தடை விதிக்க முடியாது! – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

இந்து கோவில் கட்ட தடை விதிக்க முடியாது! – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானில் ரூ.10 கோடி செலவில் இந்து கோவில் கட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து கோவில் கட்ட தடை விதிக்க முடியாது! – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.10 கோடி செலவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதன் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத் என்ற அமைப்பு சார்பில் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோவிலை கட்ட ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்து கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்து கோவில் கட்ட தடை விதிக்க முடியாது! – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவுஅரசு நிதி உதவியோடு கோவில் கட்டப்படுகிறது. மக்களின் வரி பணத்தில் கோவில் கட்டுவது சரியில்லை என்பதால் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். கோவில் கட்டும் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
கோவில் கட்ட 2017ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது என்றும், கட்டுமானத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் இஸ்லாமியக் கொள்கை படி ஆட்சி நடக்கும் நாட்டில் கோவில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்து கோவில் கட்ட தடை விதிக்க முடியாது! – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவுஇந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அமீர் பாரூக், “கோவில் கட்ட அரசு நிதி ஒதுக்கவில்லை. எனவே கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க முடியாது. நிலத்தை யாருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை அரசு மூலதன மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்யும். நீதிமன்றம் அதில் தலையிடாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்து, கிறிஸ்தவ, சீக்கிய மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கட்டாய மதமாற்றத்துக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் கோவில் கட்டக் கூடாது என்று பிரச்னை கிளப்பியுள்ளது சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.