அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஓட்டப்பட்டுள்ளதா?.. நீதிமன்றம் கேள்வி

 

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஓட்டப்பட்டுள்ளதா?.. நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்டது. அன்று சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக்கை மூடுமாறு உத்தரவிட்டனர். அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அந்த தடை நீக்கப்பட்டது. அதன் படி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஓட்டப்பட்டுள்ளதா?.. நீதிமன்றம் கேள்வி

இந்நிலையில், டாஸ்மாக்குகளில் மது அதிக விலைக்கு விற்பதாக கூறி சேலத்தை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட பிறகு ரசீது கொடுக்கப்படுகிறதா என்றும் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஓட்டப்பட்டுள்ளதா என்றும் அரசு நிர்ணயம் செய்த விலையில் தான் மதுவிற்கப்படுகிறதா என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். மேலும், இதுவரை மது எப்படி கொள்முதல் செய்யப்பட்டது குறித்து ஜூன் 25 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.