தேர்தல் வெற்றி : துரைமுருகன், விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

தேர்தல் வெற்றி : துரைமுருகன், விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. முதல் முறையாக 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளருக்கு போட்டியிட்டன. அதிமுக, திமுக மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என ஐந்து முனை போட்டி நிலவியது. கடந்த மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அதிமுகவை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி, மே 7ம் தேதி திமுக ஆட்சி அமைத்தது.

தேர்தல் வெற்றி : துரைமுருகன், விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட துரைமுருகன் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல, விராலிமலை தொகுதியில் வென்ற அதிமுக விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்தும் பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகளில் ஜெயக்குமார், துரைமுருகன் மற்றும் விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரியும் 4 வாரத்தில் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டனர்.