‘டபுள் மீனிங் டயலாக்’ இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க அதிரடி உத்தரவு!

 

‘டபுள் மீனிங் டயலாக்’ இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க அதிரடி உத்தரவு!

இரட்டை அர்த்தத்துடன் இருப்பதால் இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘டபுள் மீனிங் டயலாக்’ இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க அதிரடி உத்தரவு!

ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து வரிசையில் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘இரண்டாம் குத்து’. இந்த படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி கடும் விமர்சனத்துக்குள்ளானது. சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மக்கள் கிழித்தெறியும் வகையில், ஆபாசத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தது அந்த போஸ்டர்கள். இதற்கு இயக்குனர் பாரதி ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

‘டபுள் மீனிங் டயலாக்’ இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க அதிரடி உத்தரவு!

இதை தொடர்ந்து, வெளியாகிய இரண்டாம் குத்து படத்தின் டீசரும், டபுள் மீனிங்குடன் இருந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த படத்தை வெளியிட நிரந்தரத் தடை கோரி லட்சுமி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டாம் குத்து படத்தை தணிக்கை செய்து 32 கட்டுக்கு பிறகே ஏ சான்றிதழுடன் அனுமதி தரப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘டபுள் மீனிங் டயலாக்’ இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க அதிரடி உத்தரவு!

அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். டீசரின் வசனங்கள், காட்சிகள் எல்லாம் ஆபாசமானதாக இருப்பதாகவும் இது போன்ற டீசர்கள் வருவது நல்லதல்ல என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, தணிக்கை குழு, டிஜிபி, படத்தின் இயக்குனர் விளக்கம் தரவும் உத்தரவிட்டனர்.