கிராம சபைக் கூட்டம்: தமிழக அரசுக்கு இறுதி அவகாசம்!

 

கிராம சபைக் கூட்டம்: தமிழக அரசுக்கு இறுதி அவகாசம்!

குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஆண்டுக்கு 4 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவை தவிர்த்து மற்ற 3 முறையும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கொரோனாவை காரணம் காட்டி கூட்டத்தை ரத்து செய்த அரசு, கடந்த ஜன.26ம் தேதியும் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கவில்லை.

கிராம சபைக் கூட்டம்: தமிழக அரசுக்கு இறுதி அவகாசம்!

இதை எதிர்த்து திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். ஆனால், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாவிடில் பதில் மனு இல்லாமலேயே வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசத்தை வழங்கிய நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.