முன்ஜாமீன் வழங்க முடியாது ; ஹெச்.ராஜாவின் மனு தள்ளுபடி!

 

முன்ஜாமீன் வழங்க முடியாது ; ஹெச்.ராஜாவின் மனு தள்ளுபடி!

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேடை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்தது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா காவல் துறையினரையும் நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதையடுத்து திருமயம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார் ஹெச். ராஜா தலைமறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

முன்ஜாமீன் வழங்க முடியாது ; ஹெச்.ராஜாவின் மனு தள்ளுபடி!

இதனால், முன்ஜாமீன் கோரி ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்தார். நீதிமன்றத்தை அவதூறாக பேசியதற்கு தான் ஏற்கனவே மன்னிப்பு கோரியும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மீண்டும் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

ஹெச்.ராஜாவின் இந்த முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர் நீதிமன்றத்தையும் அவதூறாக பேசியதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்.