‘மதிப்பெண் கணக்கீட்டில் தலையிட முடியாது’.. வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

 

‘மதிப்பெண் கணக்கீட்டில் தலையிட முடியாது’.. வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

கொரோனா பாதிப்பின் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதே போல, மாணவர்களின் வருகையை வைத்தும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை, தேர்வு அடைப்படையிலேயே மதிப்பெண் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

‘மதிப்பெண் கணக்கீட்டில் தலையிட முடியாது’.. வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

இந்த நிலையில் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு பதிலாக ரிவிஷன் தேர்வுகளை வைத்து மதிப்பெண்களை கணக்கிடக்கோரி 8 மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், மாணவர்களின் நலன் கருதி அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.