‘தந்தையிடம் பேசி இறுதி முடிவை தெரிவிக்கலாம்’ எம்.எல்.ஏ பிரபுவின் மனைவிக்கு நீதிமன்றம் அவகாசம்!

‘தந்தையிடம் பேசி இறுதி முடிவை தெரிவிக்கலாம்’ எம்.எல்.ஏ பிரபுவின் மனைவிக்கு நீதிமன்றம் அவகாசம்!

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யா, தந்தையுடன் பேசி இறுதி முடிவை தெரிவிக்கலாம் என நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

கடந்த 5ம் தேதி, கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு சௌந்தர்யா(19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன், தனது பெண்ணை மீட்டுத் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார்.

‘தந்தையிடம் பேசி இறுதி முடிவை தெரிவிக்கலாம்’ எம்.எல்.ஏ பிரபுவின் மனைவிக்கு நீதிமன்றம் அவகாசம்!

அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். அதன் படி தற்போது, எம்.எல்.ஏ பிரபுவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், சௌந்தர்யா தனது தந்தையுடன் பேசி இறுதி முடிவை தெரிவிக்கலாம் என கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

‘தந்தையிடம் பேசி இறுதி முடிவை தெரிவிக்கலாம்’ எம்.எல்.ஏ பிரபுவின் மனைவிக்கு நீதிமன்றம் அவகாசம்!

முன்னதாக, 19 வயது நிறைவடையாத சௌந்தர்யாவை எம்.எல்.ஏ பிரபு ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக சௌந்தர்யா குடும்பத்தினர் கூறி வந்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட சௌந்தர்யா, “தனது முழு சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் தனது காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.