“தம்பதிகள் ஈகோவை செருப்பை போல் வீட்டுக்கு வெளியே விட வேண்டும்” – நீதிபதி அறிவுரை!

 

“தம்பதிகள் ஈகோவை செருப்பை போல் வீட்டுக்கு வெளியே விட வேண்டும்” – நீதிபதி அறிவுரை!

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர் சசிகுமார். குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் இவருக்கு எதிராக மனைவி இந்துமதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்து கால்நடைத் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரி சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

110 Indian Couple After Fight Argument People Female Male Husband Wife  Stock Photos, Pictures & Royalty-Free Images

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 15 நாட்களில் அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். மேலும், மனைவி தான் கைவிட்டுச் சென்றார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதால், குடும்ப வன்முறை தடைச் சட்ட வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, பணி செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டி வரும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Madras High Court - Wikipedia

திருமணம் என்பது ஒப்பந்தமல்ல என்றும் அது ஒரு சடங்கு என்பதை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதி, ஈகோ, சகிப்புதன்மையின்மை ஆகியவற்றை காலணிகளாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும்; இல்லாவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்றும் அறிவுரை கூறினார்.