நாட்டுக் கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா? எது நல்லது – ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டல்

நாட்டுக் கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா? எது நல்லது – ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டல்

இது நோய்கள் அதிகம் பரவும் காலம். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அதற்கு சரியான உணவுமுறையை மேற்கொள்வதே சரியான வழி.

நம் உணவில் அதிகம் சத்துள்ள பொருட்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இதற்கு பலரும் வழிகாட்டுவது முட்டை சாப்பிடச் சொல்லிதான்.

நாட்டுக் கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா? எது நல்லது – ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டல்

அதிலும் ஒரு சந்தேகம் இருக்கவே செய்யும். ஏனெனில், நாட்டுக்கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா இரண்டில் எதைச் சாப்பிடுவது என்பதே அந்தச் சந்தேகம். அதற்கான விளக்கத்தை அளிக்கிறார் ஊட்டசத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன். கூடுதலாக, முட்டையில் உள்ள சத்துகளையும் ஒருவர் எத்தனை முட்டைகள் சாப்பிடலாம் என்றும் வழிகாட்டுகிறார் தாரிணி கிருஷ்ணன். (இவர் யூடியூப் வீடியோக்கள் மூலமும் ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு அளித்து வருகிறார்.)

நாட்டுக் கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா? எது நல்லது – ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டல்

”இரண்டு வகையான முட்டைகள் இருக்கின்றன. ஒன்று நாட்டுக்கோழி முட்டை மற்றது பிராய்லர் முட்டை.  நாம் முதலில் பரிந்துரைப்பது நாட்டுக் கோழி முட்டைகளைத்தான்.

ஏனெனில், நாட்டுக்கோழிகள்தான் வெளியே திரிந்து பலவற்றை சாப்பிடுகிறது. பிராயலர் கோழியில் ஒரு கம்பிக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, ஆண்டிபயாடிக் கொடுக்கப்பட்டு முட்டை பெறப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து உணவுகளுமே கெமிக்கல் கலந்தே இருப்பதால் நாட்டுக்கோழி முட்டையோடு ஒப்பிடுகையில் அவ்வளவு நல்லதல்ல என்று கருதப்படுகிறது.  

சரி, இரண்டு வகை முட்டைகளிலிருந்து கிடைக்கும் புரதசத்து வேறு படுகிறதா என்றால் இல்லை. ஒரே அளவில்தான் புரதச் சத்து கிடைக்கிறது.

நாட்டுக் கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா? எது நல்லது – ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டல்

அடுத்து,  முட்டையில் என்னென்ன நியுட்ரைன்ஸ் இருக்கிறது எனப் பார்க்கலாம்.  முதலில் நமக்குக் கிடைப்பது புரோட்டின்.

முழு முட்டைகள் சாப்பிடுபவர்கள் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வரை சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் சாப்பிடுபவர்கல் வாரத்திற்கு 6 முதல் 8 வரை சாப்பிடலாம்.

சிலர் காலை, மாலை, இரவு என தினந்தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுகிறார்கள். இப்படி தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் நியூட்ரைன்ஸ் சரிவிகிதத்தில் கிடைப்பதில் மாற்றம் ஏற்படலாம்.

நாட்டுக் கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா? எது நல்லது – ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டல்

ஏனெனில், முட்டை அதிகளவு சாப்பிடுவதால் வயிற்றில் நிறைய இடத்தை அடைத்துக்கொள்ளும். அதனால், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை அதிகம் சாப்பிட முடியாமல் போய்விடும். நமக்கு எல்லா வகையான புரோட்டினும் முக்கியம். அவற்றில் முட்டையும் முக்கியம்.

protein efficiency ratio எனும் பார்க்கும்போது முட்டையில் 3.9 –ம் இருக்கிறது. ஆனால், பீஃப் கறியுல் 2.9 – சதமே இருக்கிறது. net protein utilization அளவைப் பார்க்கையில் 94 முட்டையில் உள்ளது, மற்றதெல்லாம் இதற்கு குறைவுதான். Protein Digestibility Corrected Amino Acid Score – ல் பார்க்கும்போதும் 1.00 . மற்றவை எல்லாம் இதைவிட குறைவுதான்.

நாட்டுக் கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா? எது நல்லது – ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டல்

ஆக, அனைத்து வகையிலும் பார்க்கையில் மிகச் சிறந்த புரோட்டின் சத்து முட்டையின் வழியாக நமக்கு கிடைக்கிறது.

நார்மலான முட்டையில் 70 கலோரிகளும் 6 கிராம் புரோட்டினும் இருக்கின்றன. அதிகளவில் கலோரியும் இல்லாததால் எல்லோரும் விரும்பி சாப்பிடலாம்.

ஆஃபாயில், ஆம்லேட், பொறியல் என பல வகைகளில் முட்டையைச் சமைப்பது எளிது.

நாட்டுக் கோழி முட்டையா… பிராய்லர் முட்டையா? எது நல்லது – ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டல்

முட்டையின் வெள்ளைப் பகுதி முழுவதுமே புரோட்டின்தான். இரண்டு முட்டைகளின் வெள்ளைப் பகுதிகளைச் சாப்பிடுபவர்களுக்கு 6 + 6 = 12 கிராம் புரோட்டின் கிடைக்கும்,

சராசரி மனிதர்களுக்கு ஒருநாளைக்கு 60 கிராம் புரோட்டின் தேவைப்படுகிறது. இரண்டு முட்டைகளின் வெள்ளைப்பகுதியை சாப்பிடுவதன் மூலம் 5-ல் ஒரு பங்கு புரோட்டின் கிடைத்துவிடுகிறது.  

விளையாட்டு போட்டிகளுக்குத் தயாராகுபவர்களுக்கு அதிக புரோட்டின் தேவைப்படும். அவர்கள் மூன்று முட்டைகள்கூட சாப்பிடலாம்’ என்று தெரிவித்தார்.