சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில் விசாரணை தொடக்கம்!

 

சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில்  விசாரணை தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தொடங்கினார்.

சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில்  விசாரணை தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அண்ணா பல்கலை,. சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலே சூரப்பா தன்னிசையாக செயல்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன், ஊழல் குறித்த புகார்களை விசாரிப்பார் என்று தெரிவித்தது.

சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில்  விசாரணை தொடக்கம்!

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றிய விசாரணையை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன். அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை தொடங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல் முறைகேடுகள் செய்ததாக துணைவேந்தராக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நீதியரசர் கலையரசன் சம்மன் அனுப்ப வாய்ப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.