கொரோனாவால் இனிதான் மோசமான நிலை வரப்போகிறது- உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இன்னும் மோசமான நிலை இனிதான் வரப்போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், கொரோனா வைரசுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டதை குறிக்கும் வகையில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம், ஆறு மாதங்களுக்கு முன் வரை நமது உலகமும் வாழ்க்கையும் ஒரு புதிய வைரசால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்படும் என்பதை நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்துள்ளதாக கூறியுள்ள டெட்ராஸ், அனைத்து நாடுகளும் நீண்டகால போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்துவரும் மாதங்களில் வைரசுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ள டெட்ராஸ் இந்த தொற்று இப்போதைக்கு முடியப்போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை என்றும் இப்போதைக்கு முடிவதாக இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

WHO

மோசமான நிலை இனிதான் வரப்போவதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்கநர் தற்போதைய சூழலில் இன்னும் மோசமான நிலை வரும் என்று அஞ்சவைப்பதாக கூறியுள்ளார் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை கண்டறிய சீனாவுக்கு அடுத்தவாரத்தில் ஒரு குழுவை அனுப்ப உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுடன் வாழப் பழகுவதைத் தவிர வேறு வழியில்லை என சில வாரங்களுக்கு முன்பே மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்தது பேசுபொருளான நிலையில், உலக சுகாதார அமைப்பும் இப்போது அதையே தெரிவித்துள்ளது.

Most Popular

ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

இன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

மும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....