கொரோனா உயிரிழப்பு… இங்கிலாந்தை முந்தியது இந்தியா!

கொரோனா உயிரிழப்பு… இங்கிலாந்தை முந்தியது இந்தியா!

கொரோனா உயிரிழப்பில் இங்கிலாந்தை முந்தி இந்தியா நான்காவது இடத்துக்கு வந்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா உயிரிழப்பு… இங்கிலாந்தை முந்தியது இந்தியா!
உலக அளவில் 2 கோடியே நான்கு லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளது. உலக நாடுகளின் கொரோனாத் தொற்று அதிகரிப்பு வரை படம் வளைந்தும், நெளிந்தும், குறைந்தும் செல்ல, இந்தியாவின் கிராஃப் மட்டும் நேராக உயர்ந்துகொண்டே செல்கிறது. 23 லட்சத்து 29 ஆயிரத்து 638 நோயாளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொரோனா உயிரிழப்பு… இங்கிலாந்தை முந்தியது இந்தியா!
கொரோனா உயிரிழப்பில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் மெக்சிகோவும் உள்ளன. இதுவரை நான்காவது இடத்தில் இருந்த இங்கிலாந்தை இந்தியா பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு… இங்கிலாந்தை முந்தியது இந்தியா!
கொரோனா கட்டுப்படுத்தும் வழிகள் முறையாக பின்பற்றுவது போல இல்லை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் திறம்பட கொரோனாவைக் கட்டுப்படுத்தி வருவதாக கூறுகின்றன. இதே நிலை நீடித்தால் உயிரிழப்புகள் எண்ணிக்கையில் விரைவில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்தாலும் அதிர்ச்சி அடைவதற்கு இல்லை என்று மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.