தமிழகத்தில் மேலும் 1,785 பேருக்கு கொரோனா, 26 பேர் பலி

 

தமிழகத்தில் மேலும் 1,785 பேருக்கு கொரோனா, 26 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.14 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.21 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

Coronavirus India Live Update: India Reports 38,792 New COVID-19 Cases In  The Last 24 Hours

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,049பேர் ஆண்கள், 736 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 50 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 762ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 278 பரிசோதனை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் மேலும் 1,785 பேருக்கு கொரோனா, 26 பேர் பலி

இன்று 26 பேர் உயிரிழந்துள்ளார். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,361 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 93 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.