டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2400 ஆக நிர்ணயம் – முதல்வர் கெஜ்ரிவால்

 

டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2400 ஆக நிர்ணயம் – முதல்வர் கெஜ்ரிவால்

கொரோனா சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழகப் பிரிவு அரசுக்கு பரிந்துரை செய்தது. அதில், கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு ரூ.23,182 வசூலிக்கலாம் என்றும் 10 நாளுக்கு ரூ. 2,31,870 வரை வசூலிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தால் ஒரு நாளைக்கு 2,31,870 வசூலிக்கலாம் என்றும் 17 நாட்களுக்கு ரூ. 4,31,411 வரை வசூலிக்கலாம் என்றும் தெரிவித்தது.

டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2400 ஆக நிர்ணயம் – முதல்வர் கெஜ்ரிவால்

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரிசோதனைக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால், டெல்லியில் விரைவு ஆண்டிஜென் கொரோனா சோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் கொரோனா சோதனை செய்வதில் டெல்லி மக்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என நம்புகிறேன் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.