“டாக்டர்! கிட்ட வந்திங்கன்னா உங்க மூஞ்சிலே துப்பிடுவேன் “இடப் பற்றாக்குறையால் கொரானா நோயாளிகளிடம் சிக்கிய பெண் மருத்துவர்..

“டாக்டர்! கிட்ட வந்திங்கன்னா உங்க மூஞ்சிலே துப்பிடுவேன் “இடப் பற்றாக்குறையால் கொரானா நோயாளிகளிடம் சிக்கிய பெண் மருத்துவர்..

இந்த கொரானா காலத்தில் டாக்டர்கள் தெய்வத்திற்கு சமம் .அப்பேற்பட்ட டாக்டர்கள் மீது சில கொரானா நோயாளிகள் எச்சில் துப்பி அவருக்கும் வைரஸை பரப்பிவிடுவதாக மிரட்டிய சமபவம் டாக்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மேற்கு திரிபுரா மாவட்ட சுகாதார கண்காணிப்பு அதிகாரி சங்கீதா சக்ரவர்த்தி, திரிபுராவில் உள்ள கொரானா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சையளித்து வருகிறார் .

“டாக்டர்! கிட்ட வந்திங்கன்னா உங்க மூஞ்சிலே துப்பிடுவேன் “இடப் பற்றாக்குறையால் கொரானா நோயாளிகளிடம் சிக்கிய பெண் மருத்துவர்..
இந்நிலையில் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்த ஐந்து பெண்களுக்கு கொரானா பரவியதால் அவர்களை கொரானா சிகிச்சைமையத்தில் சேர்க்க கூட்டிக்கொண்டு சென்றார் .அப்போது அங்கிருந்த 270க்கும் மேற்ப்பட்ட கொரானா நோயாளிகள் அந்த டாக்டர் சங்கீதாவிடம் இங்கு ஏற்கனவே இடமில்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம் ,அதனால் மேலும் நோயாளிகளை கூட்டி வந்து யாரையும் இங்கு சேர்க்காதீரகள் ,அதையும் மீறி யாரையாவது கூட்டி வந்தால் நாங்கள் டாக்டர் என்று கூட பார்க்காமல் உங்கள் முகத்தில் துப்புவோமென்றும்,.உங்களை தொட்டு உங்களுக்கும் கொரானாவை பரப்பி விடுவோமென்றும் மிரட்டியுள்ளனர் .மேலும் சிலர் அவரை தொட்டும் துப்பியும் கொடுமைப்படுத்தியுள்ளனர்
இதனால் அந்த டாக்டர் அங்கிருந்து நேராக சுகாதார அதிகாரியிடம் சென்று இதை பற்றி புகார் கூறினார் .இதை கேட்ட சுகாதார அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் .

“டாக்டர்! கிட்ட வந்திங்கன்னா உங்க மூஞ்சிலே துப்பிடுவேன் “இடப் பற்றாக்குறையால் கொரானா நோயாளிகளிடம் சிக்கிய பெண் மருத்துவர்..

இதற்கிடையில், கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. ராகேஷ் இந்த சம்பவம் பற்றி ஒரு அறிக்கையில், “அது உண்மை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்கள் வழிகாட்டுதலின்படி, விதிகளை மீறும் எந்த கொரானா நோயாளியும் வெளியேற்றப்பட்டு, காவலில் வைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்படுவார்கள். ”என்று கூறினார்