ஜூலை 6 முதல் உயர் நீதிமன்றத்தை திறக்க வேண்டும்! – பார் கவுன்சில் வலியுறுத்தல்

 

ஜூலை 6 முதல் உயர் நீதிமன்றத்தை திறக்க வேண்டும்! – பார் கவுன்சில் வலியுறுத்தல்

கொரோனா காரணமாக ஆன்லைனில் நடக்கும் விசாரணைக்கு பதில் வருகிற 6ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு எப்போது முடியும் என்றே தெரியவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தற்போது வழக்குகளை ஆன்லைனில் விசாரித்து தீர்ப்பு வழங்கி வருகிறது. முக்கியமான வழக்குகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதுவும் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் ஆஜராகும் வழக்குகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற வழக்கறிஞர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6 முதல் உயர் நீதிமன்றத்தை திறக்க வேண்டும்! – பார் கவுன்சில் வலியுறுத்தல்எனவே, வருகிற 6ம் தேதி (திங்கட் கிழமை) முதல் சென்னை உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தைத் திறந்து, நீதிபதிகள் நேரில் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் விசாரிப்பதால் நடைமுறை சிக்கல்கள் சில எழுகின்றன. எனவே, நீதிமன்றத்தை திறந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும். வழக்கு விசாரணையின்போது மனுதாரர் ஆஜராகத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மட்டும் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். வழக்கறிஞர்கள் விருப்பத்திற்கு ஏற்ப காலை நேரத்தில் நேரடி விசாரணையையும், பிற்பகலில் வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணையையும் மேற்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.