தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு போகாது – எச்சரிக்கும் வல்லுநர்கள்

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு போகாது என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

நியூயார்க்: தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு போகாது என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 57 லட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 24 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 13-வது இடத்திற்கு சென்று விட்டது.

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

Corona

இந்நிலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு போகாது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். எதிர்வரும் சில நூற்றாண்டுகளுக்கு கொரோனா வைரஸ் நம்மிடையே இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். அதாவது காலம்காலமாக நம்மிடையே இருக்கும் தட்டம்மை, எச்.ஐ.வி வைரஸ் போல.

அதுதவிர ஏற்கனவே நான்கு வகையான கொரோனா வைரஸ் இருப்பதையும் வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆகவே அவற்றில் ஒன்றாக ஐந்தாவது கொரோனா வைரஸாக நம்மிடையே இருந்து விடும். கொரோனாவால் நிலைமை எப்போதுமே மோசமாக இருக்கும் என்று அர்த்தமல்ல. நோய் எதிர்ப்பு சக்தி பரவுவதால் கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு நம் உடல்கள் காலப்போக்கில் சக்தி பெற்று விடும் என கூறியுள்ளனர்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!