கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.76 லட்சத்தை தாண்டியது… பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது…

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்து வந்தது.

மருத்துவ பரிசோதனை

இந்நிலையில் நேற்று நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் புதிதாக 8,026 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,76,823ஆக உயர்ந்தது.

மருத்துவ பணியாளர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு 1.50 லட்சத்தை தொட்ட அடுத்த 3 தினங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.76 லட்சத்தை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று மட்டும் நாடு முழுவதுமாக கொரோனா வைரசுக்கு 200 பேர் இறந்துள்ளனர். இது இதுவரையிலான காலத்தில் ஒரே நாளில் அதிக உயிர் இழப்பு ஏற்பட்ட இரண்டாவது அதிகபட்ச அளவாகும்.

Most Popular

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

தொழிலுக்கு புதுசா வந்த திருடர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து நகை ,பணத்தை திருடி செல்லும்போது அவர்களின் செல்போனை விட்டு சென்றதால், உடனே போலீசின் கையில் அவர்கள் சிக்கினார்கள் . டெல்லியின் உத்தம் நகர் பகுதியிலிருக்கும்...

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

உக்ரைன்: கொலைகார மகனை காப்பாற்ற சிறைக்கு சுரங்கம் அமைத்த தாய்!

உக்ரைனில் கொலை வழக்கில் சிறையில் உள்ள மகனை காப்பாற்ற 35 அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். உக்ரைனைின் தெற்கு பகுதியில் Zaporizhia பகுதியில் உள்ள சிறைக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்...

இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம் : வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி வேலூரில் மேலும் 139...