திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் உள்பட 21 பேருக்கு கொரோனா!

 

திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் உள்பட 21 பேருக்கு கொரோனா!

திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஐந்து பேர் உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி சென்னையில் வசித்துவந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர். அப்படி வந்தவர்கள் மூலமாக மற்ற மாவட்டங்களில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் அந்த பகுதியைச் சேர்ந்த பலருக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலமாக இவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் உள்பட 21 பேருக்கு கொரோனா!முத்துப்பேட்டையில் 48 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சென்னையில் இருந்து முத்துப்பேட்டை வந்தவர் ஆவார். அதே போல் சூரனூர் பகுதியிலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் உள்பட 21 பேருக்கு கொரோனா!இதைத் தொடர்ந்து உரிய அனுமதி பெற்று ஊர் திரும்பியவர்கள் தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யாராவது வெளியூரில் இருந்து அனுமதி பெறாமல் கிராமங்களுக்கு வந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதே போல் சுய தனிமைப்படுத்தலை மீறி வெளியே சுற்றும் நபர்கள் பற்றிய தகவலையும் போலீசாருக்கு தெரிவிக்க மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.