மீண்டும் உச்சத்தில் கொரோனா : சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

 

மீண்டும் உச்சத்தில் கொரோனா : சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலையில் உயிரிழப்புகளும் 100ஐ எட்டுகிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் போடும் பணி தொடங்கியிருப்பதால், மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் குறைந்திருப்பதே பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

மீண்டும் உச்சத்தில் கொரோனா : சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மட்டுமே புதிய பாதிப்பில் 84% பதிவாவதாக தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,11,73,761 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மீண்டும் உச்சத்தில் கொரோனா : சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

ஒரே நாளில் 113 பேர் கொரோனாவுக்கு 1,76,319 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 13,819 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,08,39,894 ஆக உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை 1,80,05,503 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.