மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு ; உஷார் மக்களே!

 

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு ; உஷார் மக்களே!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வந்தது. ஆனால், அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதாவது, 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்பு மீண்டும் 45 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு ; உஷார் மக்களே!

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலேயே பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்த மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியது. அதன் படி, கேரளாவில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தியதன் விளைவாக நேற்று பாதிப்பு 31 ஆயிரமாக குறைந்திருந்த பாதிப்பு இன்று மீண்டும் 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் 41,000 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 624 பேர் உயிரிழந்ததாகவும் 4,29,946 பேர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.