38 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கையும் குறைந்தது!

 

38 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கையும் குறைந்தது!

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 38,948 பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்தது. 30 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்திருந்த பாதிப்பு திடீரென 40 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சி அடையச் செய்தது. இது மூன்றாம் அலைக்கான தொடக்கமாக இருக்கலாம் என ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பாதிப்பு உச்சத்தை தொடலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

38 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கையும் குறைந்தது!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் கொரோனாவால் 219 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் 43,903 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் 4,04,874 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 47 ஆயிரமாக இருந்த பாதிப்பு நேற்று 42 ஆயிரமாக குறைந்த நிலையில் இன்று 38 ஆயிரமாக குறைந்துள்ளது. அதே போல, 300க்கும் மேல் பதிவாகி வந்த மரணங்கள் இன்று 219 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.